Tuesday, 6 April 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பே
காற்று பலமாய் இருக்க
பயந்து விடாதே!
அது தென்றல்தான் - உன்
பிறந்தநாள் வாழ்த்துகூற
வருகிறது சற்றே வேகமாக! என்னைப்போல!

----------------------------------------------------------------------
போட்டியிட்டேன் - நான்
போட்டியிட்டேன்
மரகதப் பூக்கள்
குளிரிளந்தென்றல்
கார்நீல மேகத்துடனும்
போட்டியிட்டேன் !
உன் பிறந்தநாள் வாழ்த்துக் கூற!

----------------------------------------------------------------------
பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை .
தேவையில்லை இந்த கவிதைக்கு!
கவிதைகள் பல நூற்றாண்டு
வாழ்வது - மரபுதானே!

----------------------------------------------------------------------
நண்பா
உன் அருகில் நானிருந்தால்
ஆதவன் கரமுனை தொடுமுன்
என் வாழ்த்துத் தென்றல் தழுவியிருக்கும்!
நானோ இங்கிருப்பதால் - அந்த
ஆதவனிடமே தந்துள்ளேன் - உன்
பிறந்தநாள் வாழ்த்துக்களை!
இன்றுனை முதலில் தழுவிய
கதிரவனின் கதிர்கள் - என் கைகளே!
தமிழ் போல் வாழ்க!
கவிபோல் வாழ்க!

----------------------------------------------------------------------
உன் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோறுகிறேன் மறுபரிசீலனை!
தோட்டத்து மலர்கள் ஒன்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
குளுமையின் உவமை நிலவேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
கவிதைகள்தான் என்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
பின் உனக்கு மட்டும் ஏன்?
நீ முழுநிலவில் மலர்ந்த கவிதை என்பதாலோ?
பல்லாண்டு வாழ்க!
பண்பாடு வளர்க்க!

-சக்தி

1 comment:

Sivakumar said...

Good Kavithaigal.
ஏற்கமறுக்கிறதே ஏன் ? - Good..