Monday, 19 April 2010

காதல் செய்!







காதல் செய்!

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
மஞ்சள் வெய்யிலை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
வெள்ளை மழையை காதல் செய் !

திண்ணை வைத்த வீட்டை சிட்டு குருவி கூட்டை
தாடி வைத்த ஆட்டை காதல் செய் !

வண்ண பூக்கள் தோட்டம் வெள்ளி பனிமூட்டம்
விண்ணில் மேக கூட்டம் காதல் செய் !

வாழும் வாழ்வை காதல் செய் !

போகும் ஊரை நீ காதல் செய் !
காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

நான் என்ற அகந்தை துளியும் இன்றி
உயர்ந்த மலைகள் கால் மிதித்த இடத்தில்
பாத சுவட்டை அழிக்கும் அலைகள்
மாட்டு கொம்பில் கட்சி பாசம்
டாட்டா காட்டும் குழந்தை நேசம்
காற்றில் வரும் மீன்கள் வாசம்
இதையும் காதலிப்போம்.

காதல் செய் காதல் செய் !






Tuesday, 6 April 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பே
காற்று பலமாய் இருக்க
பயந்து விடாதே!
அது தென்றல்தான் - உன்
பிறந்தநாள் வாழ்த்துகூற
வருகிறது சற்றே வேகமாக! என்னைப்போல!


----------------------------------------------------------------------
போட்டியிட்டேன் - நான்
போட்டியிட்டேன்
மரகதப் பூக்கள்
குளிரிளந்தென்றல்
கார்நீல மேகத்துடனும்
போட்டியிட்டேன் !
உன் பிறந்தநாள் வாழ்த்துக் கூற!


----------------------------------------------------------------------
பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை .
தேவையில்லை இந்த கவிதைக்கு!
கவிதைகள் பல நூற்றாண்டு
வாழ்வது - மரபுதானே!



----------------------------------------------------------------------
நண்பா
உன் அருகில் நானிருந்தால்
ஆதவன் கரமுனை தொடுமுன்
என் வாழ்த்துத் தென்றல் தழுவியிருக்கும்!
நானோ இங்கிருப்பதால் - அந்த
ஆதவனிடமே தந்துள்ளேன் - உன்
பிறந்தநாள் வாழ்த்துக்களை!
இன்றுனை முதலில் தழுவிய
கதிரவனின் கதிர்கள் - என் கைகளே!
தமிழ் போல் வாழ்க!
கவிபோல் வாழ்க!


----------------------------------------------------------------------
உன் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோறுகிறேன் மறுபரிசீலனை!
தோட்டத்து மலர்கள் ஒன்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
குளுமையின் உவமை நிலவேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
கவிதைகள்தான் என்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
பின் உனக்கு மட்டும் ஏன்?
நீ முழுநிலவில் மலர்ந்த கவிதை என்பதாலோ?
பல்லாண்டு வாழ்க!
பண்பாடு வளர்க்க!


-சக்தி

Friday, 2 April 2010

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !


மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை !

யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை !

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் !
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் !

கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !


Wednesday, 17 March 2010

சத்தமில்லாமல் ஓர் மனத்தகர்ப்பு!


சத்தமில்லாமல் ஓர் மனத்தகர்ப்பு!

இவள்தான் உன் பொண்டாட்டி
சொன்னது என் பாட்டி - வெட்கி
ஓடிய அத்தை மகளைக் காட்டி

ஏழே வயதான நானன்று
தந்தை முகம் பார்க்க - களிப்பில்
தலையசைப்பு சத்தமில்லாமல் !

அவள்தன் காதலன் கைசேர்க்க இன்றோ
சின்ன சலசலப்பு - ஓய்ந்தபின்
அனைவருக்கும் களிப்பு - என்னில் மட்டும்
சத்தமில்லாமல் ஓர் மன
த்தகர்ப்பு !


-சக்தி


Monday, 15 March 2010

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு.

௧. எழுத்திலக்கணம்
௨. எழுத்தாற்றல்
௩. கணிதவியல்
௪. மறைநூல்
௫. தொண்மம்
௬. இலக்கணவியல்
௭. நயனூல்
௮. கணியக்கலை
௯. அறத்துப்பால்
௧௦. உவகக்கலை
௧௧. மந்திரக்கலை
௧௨.நிமித்தகக்கலை
௧௩. கம்மியக்கலை

௧௪. மருத்துவக்கலை
௧௫. உறுப்பமைவு
௧௬. மறவனப்பு
௧௭. வனப்பு
௧௮. அணியியல்
௧௯. இனிது மொழிதல்
௨௦. நாடகக்கலை
௨௧. ஆடற்கலை
௨௨. ஒலிநுட்ப அறிவு
௨௩. யாழியியல்
௨௪. குழலிசை
௨௫. மத்தளநூல்

௨௬. தாளயியல்
௨௭. வில்லாற்றல்
௨௮. பொன்னோட்டம்
௨௯. தேர்ப்பயிற்சி
௩௦. யானையேற்றம்
௩௧. குதிரையேற்றம்
௩௨. மணிநோட்டம்
௩௩. மண்ணியல்
௩௪. போர்ப்பயிற்சி
௩௫. கைக்கலப்பு
௩௬. கவர்ச்சியியல்
௩௭. ஓட்டுகை
௩௮. நட்புபிரிக்கை
௩௯. மயக்குக்கலை
௪௦. புணருங்கலை
௪௧. வசியக்கலை
௪௨. இதழியக்கலை
௪௩. இன்னிசைப்பயிற்சி
௪௪. பிற உயிர் மொழி
௪௫. மகிழுறுத்தம்
௪௬. நாடிப்பயிற்சி
௪௭. கல்லுளம்
௪௮. இளஞ்சிப்பரிகை
௪௯. மறந்ததையறிதல்

௫௦. வான்புகுதல்
௫௧. வான்செல்கை
௫௨. கூடுவிட்டு கூடு பாயுதல்
௫௩. தன்னுருகரத்தல்
௫௪. மாயம்
௫௫. பெருமாயம்
௫௬. நீர்க்கட்டு
௫௭. அலர்க்கட்டு
௫௮. வளிக்கட்டு
௫௯. கண்கட்டு
௬௦. நாவுக்கட்டு
௬௧. விந்துக்கட்டு
௬௨. புதையற்கட்டு
௬௩. வார்க்கட்டு
௬௪. சூனியம்

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் நிகழ்ச்சியில் இந்த பட்டியலை கூரிய இளம் பேச்சாளனுக்கு நன்றி.
கேட்டதை எழுத்தாக்கி இங்கு பதித்தது மட்டுமே நான்.