Friday, 16 July 2010

விளையாட்டாய் மருத்துவம்!


சித்த மருத்துவம் மற்றும் சித்தர்கள் பற்றிய தெளிவான புரிதல் சாமான்யர்களின் மத்தியில் இன்றும் இல்லாத நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு (திருவள்ளுவருக்கு) முன்னரே சித்தர்கள் இருந்துள்ளனர் என சில இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக என் நண்பனின் தாயார் கூரிய செவிவழிச்செய்தி ஒன்று என்னை மிகவும் கவர, அதை இந்த வலைப்பூவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“ சித்தர்கள் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருப்பவர்கள். அவ்வாறு பயணம் செய்யும் போது குழந்தைகளிடம் மருத்துவக் குறிப்பு நிறைந்த பாடல்களை விளையாட்டு போல சொல்லிக்கொடுத்து சென்றுவிடுவர் என்பதுதான் “
இப்போது தனது ஐம்பதுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலர் சிறுவயதில் இந்த பாடலை பாடி விளையாடி இருக்கக்கூடும்.

“ காக்கா கருப்பக்கா
  கஞ்சிக்கு கடி நெல்லிக்கா
  பூப்பூ புளியம்பூ
 பொன்னாங்கன்னிக்கு தாழம்பூ “

காய்க்காத கருப்பைக்கு நெல்லிக்காயும், பூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு புளியம்பூ மருந்தாகும் என்றும், பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்கள் தாழம்பூ போன்ற மேனியை பெறுவர் என்ற மருத்துவக் குறிப்பும் அடங்கியுள்ளது.

”தத்தக்கா புத்தக்கா தயிரும் சோறும்
முட்டவந்தா எறுமை சோறு
பனிமலையில ஏரி கொடி நட்டுவந்த
வீரய்யா! உங்க அப்பா பேரு என்ன ?

முருங்கப்பூ....!

முருங்கப்பூவ தின்னவரே
முந்திரி சாற்றை குடிச்சவரே
பாவை கைய படக்குன்னு எடு!

எடுக்காவிட்டால்,

கோழிக்குடம்பை எடுத்து
குப்பைமேனிய எடுத்து
கூசாம கை எடுத்துக்கோ! “

தத்தக்கா புத்தக்கா சின்ன குழந்தைகளுக்கு தயிர் சோறு, அடங்காமல் அதிக முரட்டுத்தனமான குழந்தைகளுக்கு எருமை பாலும் எருமை தயிர் சோறு. அது குழந்தையை கொஞ்சம் மந்தமாக்கி நல்வழிப்படுத்த உதவும். பனிமலையிலே ஏறிகொடி நாட்டும் தைரியமும் ஆண்மையும் முருங்கப்பூவின் மகிமை, அதுபோல முந்திரிச்சாறு, கோழியின் கல்லீரல் மற்றும் குப்பை மேனிக்கீரை போன்றவை ஆண்களின் கலவி வாழ்க்கையில் சிறந்துவிளங்க உதவும். மற்றும் அவைகளை மிகவும் சோர்ந்து, சோம்பிக்கிடக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து சுறுசுறுப்படைய செய்ய இயலும் என்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த பாடல்களும் அதன் விளக்கமும் சித்தர்கள் பற்றியறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
சித்தர்கள் பற்றி கீழ்கண்ட வலைப்பூவில் தோழி தொடர்ந்து பல செய்திகளை மிக எளிய நடையில் பதிப்பித்துவருகிறார்.



Wednesday, 7 July 2010

சிந்தனை செய் மனமே!

இந்த செயலை அந்த உண்மையான இறைவன் பரிசுத்த ஏசுவே விரும்பமாட்டார்! இது போன்ற செயலில் ஈடுபடும் என் கிருத்துவ உடன்பிறப்புகளே, குறைந்தபட்சம் உங்கள் மத சேவை அதை ஏற்றுக்கொள்ளும் இறைவனுக்கேனும் பிடித்தவகையில் இருக்கவேண்டும் அல்லவா ? இன்றைய காலகட்டத்தில் இது ஒரு தொழிலாகவே (profession) உருவெடுத்துள்ளது. இங்கு கொரியாவில் அது ஒரு தர்மசங்கடமாகவே உள்ளது கொரியவாழ் வெளிநாட்டவர்க்கு. வாரத்தின் இறுதிநாள் நிம்மதியான உறக்கத்தில் உள்ள நண்பகல் நேரத்தில் ஒலிக்கும் அழைப்பு ம்ணி. உண்மையிலேயே அவர்கள் மிகவும் கணிவானவர்கள், அதனால் தானோ என்னவோ நாம் குறிப்பாய் உணர்த்தும் செய்தியை அவர்கள் உணரவே மாட்டார்கள்.

Saturday, 5 June 2010

கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்

கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்











வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் (Cherry Blossom) மரங்களின் ரம்மியமான அழகை கண்டுகளிக்க “ஜின்ஹே” என்ற நகரம் நோக்கிய சிறிய கப்பல் பயணத்தில் பதிக்கப்பட்ட விடியோ காட்சி. ஒரறிவே கொண்ட பறவைகளின் மிக அற்புதமான கலை நிகழ்ச்சியாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் பல விலங்கு மற்றும் பறவைகளின் சரணாலயங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவோ பயிற்சிக்குட்படாத இயற்கை பறவைகளின், இயல்பான சாகசங்கள். இதில் படித்துணர்ந்து கொள்வத்ற்குக்கூட கடினமான பல இயற்பியல் விதிகளின் பயன்பாட்டை காணலாம். குறைந்தது 12 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பலில் இருந்து வீசப்படும் “சிப்ஸ்” துகள்கள் காற்றில் பறந்து வர அவற்றை சரியாக தன் சிறிய அலகுகளால் கவ்வும் காட்சி அற்ப்புதமாக இருந்தது.


கொரிய வரலாற்றின் வீரமங்கை


கொரிய வரலாற்றின் வீரமங்கை
”ஜின்ஜு”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில் உள்ள "நம்” ஆற்றுப்படுகையில் அமைந்த கோட்டையில் இவ்வீரமங்கையின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1593-ல் நடைபெற்ற போரில் ஜப்பானியர்கள் கொரியாவின் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர். ” நொங்கே ” என்ற கொரிய நடன மங்கை ஜப்பானியர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடனமாட பணிக்கப்பட்டிருக்கிறாள். அந்த நடன நிகழ்ச்சியில் வெற்றிக்களிப்பில் இருந்த ஜப்பானிய தளபதியை (கெயாமுரா ரோகுசுகே) கட்டிப்பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையில் இருந்த பாறையின் மீது தாவிகுதித்து அவனை கொன்று தானும் உயிர்நீத்த பெருமைக்குரிய வீரமங்கை இன்றும் நினைவுக்கூரப்படுகிறாள்.
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!

கொரில்லா குழந்தை மனித தாயின் பராமரிப்பில்


மனமார்ந்த பாராட்டுக்கள் அந்த கொரியப் பெண்ணிற்கு.
மிகவும் கொடுத்துவைத்த குரங்குகள். மாற்றினத்தாயின் இதமான பராமரிப்பில் தன் இனத்தின் இயல்புகளை மற்றவர் அறிய ஆராய்ச்சி கூடத்தில் வாழ்கிறது.
இடம்: சியோல் கிராண்ட் பார்க்.

Thursday, 3 June 2010

முன் பனியா! முதல் மழையா!


முன் பனியா! முதல் மழையா!

முன் பனியா! முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே!

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீதானே!

என் பாதைகள் என் பாதைகள்

உனது விழி பார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள்

உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே !

மார்கழி பூவே!


மார்கழி பூவே!

மார்கழி பூவே மார்கழி பூவே!
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தாள் கனவுகள் கொள்ளை!
பூக்களை பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடை பாதை கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் இன்று ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்।
மார்கழி பூவே மார்கழி பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை!