Friday, 12 November 2010
தமிழில் பேசுவது அந்நியமா?
இன்றைய உலகப் பொருளாதாரத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, மேலைநாட்டு (பண்பாடு, மொழி) மோகத்தில் சிக்கி, நாளைய இளைஞர்சமுதாயத்திற்கு ஒரு மாய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் இச்சமுதாய சூழல் மாற்றங்களில் உற்று நோக்கியவற்றை பதிக்க விரும்புகிறேன்.
இன்றைய கணிப்பொறி மற்றும் நிறுவன வர்த்தகம் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாமல், நடுத்தட்டு சாமானிய இளைஞனும் “ஆங்கிலம்” என்ற மாய அழுத்தத்துக்கு ஆளாகின்றான். இதன் விளைவு, ”ஆங்கிலம் பேசுவது பெருமை” என்பது மாறி ”தமிழில் பேசுவது இழிவு” என்ற எண்ணத்திற்கு இத்தலைமுறையினர் பயனிப்பது உதாரணமின்றி உணரக்கூடிய செய்தியாகும்.
ஆங்கிலத்தில் பேசுவது பெருமைதான் அதற்கு மறுப்பில்லை, ஆனால் தமிழில் பேசுவது, நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துவது இழிவு என்ற சிந்தனை நம் தமிழ் சமூகத்தில் நிலைகொள்வது மிகவும் வருந்தவேண்டிய சூழல். நம் குழந்தைகள் நம்மிடம் (சமுதாயதில்) இருந்தே சொற்களை தெரிவு செய்கின்றன. ஆதலால் (இன்றைய தலைமுறையினர்) நம்மிடம் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு தார்மீக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி, பொருளாதாரம், அரசியல், பன்னாட்டு தொடர்புகள் என பல துறைகளிலும் தன் பொறுப்புணர்ந்து செவ்வனே செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாம் நம் மொழியியல் கடமையையும் உணர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
தாய்மொழியை மதிப்பெண்களுடனும், பொருளாதாரத்துடனும் ஒப்பிட்டு பார்க்கும் போக்கும் பெருகிக்கொண்டேதான் இருக்கிறது. அதன் விளைவு சில பெற்றோரே பள்ளியில் கூட இரண்டாம் மொழி பாடமாக தமிழை தெரிவு செய்யாமல் ( பயிற்று மொழி ஆங்கிலம் என்பது நகர வாழ்வியலில் எழுதப்படாத சட்டமாகவே மாறிவிட்டது) இந்தியையும் பிரெஞ்சு மொழியையும் தெரிவு செய்து, தாய்மொழியின் சுவையைகூட உணர இயலாத ஊனமுற்ற தலைமுறையை உருவாக்குகின்றோம்.
நல்ல தமிழில் பேச முயற்சித்து அதை செவ்வனே இந்நாளும் செய்து வருகின்ற நடிகர் கமல் அவர்களின் மொழியியல் சார்ந்த எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும். அனைத்து கூட்டங்களிலும், நேர்காணல் நிகழ்ச்சிகளிலும் தமிழை இயன்றவரை கலப்பில்லாமல் பேசுவதை தன் முத்திரையாக கொண்டுள்ள அவருக்கும், இதுபோன்ற கருத்துக்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
கமல் நேர்காணல் - இங்கே சொடுக்குக
தமிழகத்தில் தமிழனுடன் தமிழில் பேசுவது அந்நியமா ? என்ன அநியாயம்....!
புகழ் வெளிச்சத்தில் உள்ள நடிகரின் முயற்சி பலராலும் எளிதில் அறியப்படுகிறது. அது போன்ற முயற்சிகள், நாடு முழுவதும் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பல நண்பர்களால், மேற்கொள்ளப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
பொறுப்புண்ர்ந்து செயற்படும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பாராட்டுக்கள் !
மாற்று மொழியின் உண்மையான தேவையற்ற இடங்களில் (தனிப்பட்ட வாழ்வியலில்) தமிழையே பயன்படுதுவோம்.
இச்சூழலில் இருந்துகொண்டே தான் இச்சூழலை மாற்றவேண்டும்.
கைகோர்ப்போம் நண்பர்களே !.
Tuesday, 7 September 2010
” கொரிய தமிழ் மொழித்தொடர்பு ”
” கொரிய தமிழ் மொழித்தொடர்பு ” என்ற தலைப்பில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில், இரு அறிஞர்கள், ஆதாரங்களுடன் பறைசாற்றி கூறியுள்ளனர். ஒருவர் ஜெர்மெனி ந. கண்ணன் அவர்கள் ஏனையவர் கொரியக் நாட்டு மொழியியல் அறிஞர் கிம் ஜூங் நாம். அவர்களது நேர்காணலை கீழுள்ள தொடுப்பில் காண்க. (ப. 77-79)
www.tamilheritage.org/old/text/ebook/chemozi_collection.pdf
அப்பா, அம்மா, நாள், நான், வா போன்ற பொதுவான சொற்கள் கொரிய மொழியில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வறிஞர்களின் ஆராய்ச்சி பற்றி அறிந்து, என் கொரிய மொழி பயிற்சி வகுப்புகளில் சிந்தித்த போது மேலும் இரண்டு சொற்கள் கிடைத்தன. அவை மருவிய தமிழ் சொற்களாகவே கருதத்தோன்றுகின்றன.
1. மொக்கு - 먹다
’மொக்கு’ என்ற சொல் (கொரிய மொழியில் ”மொக்தா”) பழந்தமிழ் இலக்கியங்களில் ‘வாய் நிறைய தின்னுதல்’ (எ.கா. பசியில் வாடிய ஒருவனுக்கு அறுசுவை உணவு கிடைத்தால் எப்படி தின்பானோ?) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. இன்றைக்கும் கூட “ என்ன மூக்கு முட்ட மொக்குனியா? “ என கேளியாக கேட்கும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருக்கிறது.
தமிழ்ப் பெயர்களுக்கு “அன்” விகுதி போல கொரிய வினைச்சொற்களுக்கு “தா” விகுதி. தமிழ் மொக்கு--> மொக்தா வாக திரிந்திருக்ககூடும்.
மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ-
, v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
முக்கு²-தல் mukku-
, 5 v. tr. cf. மொக்கு-. To eat in large mouthfuls; நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல். பாசவன் முக்கி (புறநா. 63).
மூலம் : (தமிழ் லெக்சிகன்) இணைய தமிழகராதி.
먹다1 1.[음식을] eat, have, take, [상식(常食)으로] live on, feed on.
மூலம்: கொரிய- ஆங்கில இணையஅகராதி.
2. ஒல்லுதல் - 어울리다
”ஒல்லுதல்” என்ற தமிழ்ச்சொல் 어울리다 (ஒவுல்லிதா) என்று கொரிய மொழியில் அதே பொருளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கீழுள்ள குறிப்புகள் சிந்தனைக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
ஒல்லு-தல் ollu-
, prob. 5 v. [M. ollu.] intr. 1. To be able, possible, practicable; இயலுதல். ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே (குறள், 673). 2. To agree; உடன்படுதல். பாசறை யல்லது நீயொல் லாயே (புறநா. 31, 6). 3. To be fit, suitable; தகுதல். கங்குற்போதி லீங்கு வந்திடுக தொல்லாது (கந்தபு. வள் ளியம். 162). 4. To combine, unite, join; பொருந்து தல். கானத் தொல்லும் பேரழல் (கந்தபு. ஆற்று. 7). 5. To occur, happen, take place; சம்பவித்தல். (W.)--tr. 1. To brook, tolerate; பொறுத்தல். ஒல் லுவ சொல்லாது (பரிபா. 12, 65). 2. To mend, as a net; to braitl, as a basket; ஒலைப்பெட்டி முதலி யன பொத்துதல். (W.)
மூலம் : (தமிழ் லெக்சிகன்) இணைய தமிழகராதி.
어울리다 1.
[어우르게 되다] associate (with), join (with), mix[mingle] (with), bear[keep] (a person) company, give (a person) one´s company, go[run] with.
2.[조화되다] become, match, suit, befit, go (well) (with), be becoming (to), harmonize (with), be suitable (to, for), be in keeping(with).
மூலம்: கொரிய- ஆங்கில இணையஅகராதி.
இவைகளும் கொரிய தமிழ் மொழித்தொடர்புக்கு சான்றாக அமைகின்றன.

பதினாரும் பெற்று....!
பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்தக் கேட்டிருக்கின்றோம்.
அந்த பதினாறு என்னவென்று ஒரு தொலைக்கட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் கூறக்கேட்டு பதிக்கப்படுகிறது.
1. கல்வி
2. அறிவு
3. ஆயுள்
4. ஆற்றல்
5. இளமை
6. துணிவு
7. பெருமை
8. பொன்
9. பொருள்
10. புகழ்
11. நிலம்
12. நன்மக்கள்
13. நல்லொழுக்கம்
14. நோயின்மை
15. முயற்சி
16. வெற்றி
பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக!

Friday, 16 July 2010
விளையாட்டாய் மருத்துவம்!
சித்த மருத்துவம் மற்றும் சித்தர்கள் பற்றிய தெளிவான புரிதல் சாமான்யர்களின் மத்தியில் இன்றும் இல்லாத நிலைதான் நீடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு (திருவள்ளுவருக்கு) முன்னரே சித்தர்கள் இருந்துள்ளனர் என சில இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன.
இது தொடர்பாக என் நண்பனின் தாயார் கூரிய செவிவழிச்செய்தி ஒன்று என்னை மிகவும் கவர, அதை இந்த வலைப்பூவில் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
“ சித்தர்கள் பெரும்பாலும் பயணித்துக்கொண்டே இருப்பவர்கள். அவ்வாறு பயணம் செய்யும் போது குழந்தைகளிடம் மருத்துவக் குறிப்பு நிறைந்த பாடல்களை விளையாட்டு போல சொல்லிக்கொடுத்து சென்றுவிடுவர் என்பதுதான் “
இப்போது தனது ஐம்பதுகளில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் சிலர் சிறுவயதில் இந்த பாடலை பாடி விளையாடி இருக்கக்கூடும்.
“ காக்கா கருப்பக்கா
கஞ்சிக்கு கடி நெல்லிக்கா
பூப்பூ புளியம்பூ
பொன்னாங்கன்னிக்கு தாழம்பூ “
காய்க்காத கருப்பைக்கு நெல்லிக்காயும், பூப்படைதல் தொடர்பான பிரச்சினைகளுக்கு புளியம்பூ மருந்தாகும் என்றும், பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்கள் தாழம்பூ போன்ற மேனியை பெறுவர் என்ற மருத்துவக் குறிப்பும் அடங்கியுள்ளது.
”தத்தக்கா புத்தக்கா தயிரும் சோறும்
முட்டவந்தா எறுமை சோறு
பனிமலையில ஏரி கொடி நட்டுவந்த
வீரய்யா! உங்க அப்பா பேரு என்ன ?
முருங்கப்பூ....!
முருங்கப்பூவ தின்னவரே
முந்திரி சாற்றை குடிச்சவரே
பாவை கைய படக்குன்னு எடு!
எடுக்காவிட்டால்,
கோழிக்குடம்பை எடுத்து
குப்பைமேனிய எடுத்து
கூசாம கை எடுத்துக்கோ! “
தத்தக்கா புத்தக்கா சின்ன குழந்தைகளுக்கு தயிர் சோறு, அடங்காமல் அதிக முரட்டுத்தனமான குழந்தைகளுக்கு எருமை பாலும் எருமை தயிர் சோறு. அது குழந்தையை கொஞ்சம் மந்தமாக்கி நல்வழிப்படுத்த உதவும். பனிமலையிலே ஏறிகொடி நாட்டும் தைரியமும் ஆண்மையும் முருங்கப்பூவின் மகிமை, அதுபோல முந்திரிச்சாறு, கோழியின் கல்லீரல் மற்றும் குப்பை மேனிக்கீரை போன்றவை ஆண்களின் கலவி வாழ்க்கையில் சிறந்துவிளங்க உதவும். மற்றும் அவைகளை மிகவும் சோர்ந்து, சோம்பிக்கிடக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து சுறுசுறுப்படைய செய்ய இயலும் என்பதாக இந்த பாடல் அமைந்துள்ளது.
இந்த பாடல்களும் அதன் விளக்கமும் சித்தர்கள் பற்றியறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது.
சித்தர்கள் பற்றி கீழ்கண்ட வலைப்பூவில் தோழி தொடர்ந்து பல செய்திகளை மிக எளிய நடையில் பதிப்பித்துவருகிறார்.
சித்தர்கள் பற்றி கீழ்கண்ட வலைப்பூவில் தோழி தொடர்ந்து பல செய்திகளை மிக எளிய நடையில் பதிப்பித்துவருகிறார்.
Wednesday, 7 July 2010
சிந்தனை செய் மனமே!

இந்த செயலை அந்த உண்மையான இறைவன் பரிசுத்த ஏசுவே விரும்பமாட்டார்! இது போன்ற செயலில் ஈடுபடும் என் கிருத்துவ உடன்பிறப்புகளே, குறைந்தபட்சம் உங்கள் மத சேவை அதை ஏற்றுக்கொள்ளும் இறைவனுக்கேனும் பிடித்தவகையில் இருக்கவேண்டும் அல்லவா ? இன்றைய காலகட்டத்தில் இது ஒரு தொழிலாகவே (profession) உருவெடுத்துள்ளது. இங்கு கொரியாவில் அது ஒரு தர்மசங்கடமாகவே உள்ளது கொரியவாழ் வெளிநாட்டவர்க்கு. வாரத்தின் இறுதிநாள் நிம்மதியான உறக்கத்தில் உள்ள நண்பகல் நேரத்தில் ஒலிக்கும் அழைப்பு ம்ணி. உண்மையிலேயே அவர்கள் மிகவும் கணிவானவர்கள், அதனால் தானோ என்னவோ நாம் குறிப்பாய் உணர்த்தும் செய்தியை அவர்கள் உணரவே மாட்டார்கள்.
Saturday, 5 June 2010
கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்
கடற்பறவைகளின் இயல்பான சாகசங்கள்
வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கும் (Cherry Blossom) மரங்களின் ரம்மியமான அழகை கண்டுகளிக்க “ஜின்ஹே” என்ற நகரம் நோக்கிய சிறிய கப்பல் பயணத்தில் பதிக்கப்பட்ட விடியோ காட்சி. ஒரறிவே கொண்ட பறவைகளின் மிக அற்புதமான கலை நிகழ்ச்சியாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சிகள் பல விலங்கு மற்றும் பறவைகளின் சரணாலயங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுவோ பயிற்சிக்குட்படாத இயற்கை பறவைகளின், இயல்பான சாகசங்கள். இதில் படித்துணர்ந்து கொள்வத்ற்குக்கூட கடினமான பல இயற்பியல் விதிகளின் பயன்பாட்டை காணலாம். குறைந்தது 12 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லும் கப்பலில் இருந்து வீசப்படும் “சிப்ஸ்” துகள்கள் காற்றில் பறந்து வர அவற்றை சரியாக தன் சிறிய அலகுகளால் கவ்வும் காட்சி அற்ப்புதமாக இருந்தது.
கொரிய வரலாற்றின் வீரமங்கை
கொரிய வரலாற்றின் வீரமங்கை
”ஜின்ஜு”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில் உள்ள "நம்” ஆற்றுப்படுகையில் அமைந்த கோட்டையில் இவ்வீரமங்கையின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1593-ல் நடைபெற்ற போரில் ஜப்பானியர்கள் கொரியாவின் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர். ” நொங்கே ” என்ற கொரிய நடன மங்கை ஜப்பானியர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடனமாட பணிக்கப்பட்டிருக்கிறாள். அந்த நடன நிகழ்ச்சியில் வெற்றிக்களிப்பில் இருந்த ஜப்பானிய தளபதியை (கெயாமுரா ரோகுசுகே) கட்டிப்பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையில் இருந்த பாறையின் மீது தாவிகுதித்து அவனை கொன்று தானும் உயிர்நீத்த பெருமைக்குரிய வீரமங்கை இன்றும் நினைவுக்கூரப்படுகிறாள்.
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!
Subscribe to:
Posts (Atom)