Thursday, 3 June 2010

பார்த்துக்கொள்!


பார்த்துக்கொள்!

சற்றேமுன் பிடுங்கி
எறிந்த ஆலவிருட்ச சுவடானது - என் உள்ளம்
உண்மைதான் பிடுங்கி எறியப்பட்டது
ஆலவிருட்சம் அல்ல - என் காதல் விருட்சம்
உயிர் பிரியும் வலியையும்
தாங்கி இருந்தேன் - என்னுடன் பிறந்த
நண்பர்களும் அறியா வண்ணம்!
விதை(ளை)தத்தவன் நீ - கால மருத்துவனே
அழகு தமிழால் மருந்து போடு!
இனிய கவியால் மருந்து போடு!
என் உள ரணம்
ஆரும்வரை பார்த்துக்கொள்!
இன்னொரு உள்ளம்
ரணமாகாமல் பார்த்துக்கொள்!
-சக்தி

உயர்வில் சரிவு!


உயர்வில் சரிவு!

மழலையாய் கழித்த காலங்கள் - அது

நினைவில் இல்லை - நிழலாடும் கற்பனையில்

சலிக்காமல் நினைக்கும் அ(ம்மா)ப்பாவின்

கொஞ்சலுக்கிடையில்!

சிறுவனாய் கடந்த பருவம் - சிறிய

குருவிக் குடும்பம் - மனதில்

போட்டு வைத்த பதியம்!

கூட்டுக்கு அது ஒரு வாயில்

ஈட்டிய லட்சுமி போவதற்கோ

பலவாயில்!

எங்கஊரு ரேசன் கடையிலே

உளுத்த அரிசி வாசனைச் சோறு

அள்ளித்தின்ன அறியா வயசு

மகிழ்ச்சி பெருக்காய் நெஞ்சுக்குள்ளே!

மலைமேல் மண்சரிய

உருண்டோடிய பாறையாய்

உருண்ட காலச்சக்கரத்தில் - கிடைத்தது

பட்டறிவும் படிப்பறிவும் விழித்துழைக்க

முத்தென தொழிழாக்கி

உரியது சில ஆக்கி - நின்ற போதினிலே

சரிந்து கிடந்தது குருவிக்கூட்டு மகிழ்ச்சி!

பிரபஞ்ச விரிவாக்க விதிபோல

மனித மனமும் விரிந்து கொண்டும்

ஒன்றைவிட்டு ஒன்று விலகிக்கொண்டும்

போகும் போலும்!

-சக்தி

ஏற்கமறுக்கிறதே ஏன் ?




ஏற்கமறுக்கிறதே ஏன் ?

நீ விரும்பிய ஒன்று - கிடைக்காமல்

போவதுஅதைவிட சிறந்த ஒன்று கிடைப்பதற்கே!

என் வாழ்நாளில் நானே உணர்ந்தபின்னும்

கண்ணே! உன் விஷயத்தில் மட்டும் - மனம்

ஏற்கமறுக்கிறதே ஏன் ?


-சக்தி

காலம் கடந்த பாடம்!


காலம் கடந்த பாடம்!

அவன் பார்வையில் மாயை(காதல்) படர
ஆனது அவள் எச்சில் குமிழியும்
ரசனைக்குரியதாக !

தந்தையை ஏய்த்து விட்டு வந்தாள்
தன்னை பார்க்க - மகிழ்ந்தான்!
தன் சிநேகிதத்தை பொய்யால்
சமாளிக்க - ரசித்தான்!
நேர்க்கொண்ட நோக்கில்லா(ததை)
நளினமென - உவந்தான்!
மிகப் பிடித்த பிடிவாதம்
அவளுக்குரியமிடுக்காய் - உணர்ந்தான்!
செய்த பணவிரயம் தன்னுடனான
காலவிரயத்துக்கே - என்றெண்ணினான்!
உற்றார் உறவினரை எதிர்த்து
மணமுடித்து - மகிழ்ந்தான்!
மனைவியான காதலியின்
சுயவியல்புகளால் - சிந்தித்தான்!
தவறான விஷயங்கள் மட்டுமே
தெரிந்திருக்கிறது - மிக அழகாக!

யதார்த்தம் தைரியம் சிந்தனையும்
சமூக பார்வையும் கோபமும்
வாழ்வு நோக்கிய முனைப்பும் மட்டுமே
நேசிக்கப்படவேண்டியவை!
காலம் கடந்தப் பாடம் - உதவட்டும்
மற்றவர்களுக்கேனும் !
-சக்தி

Monday, 19 April 2010

காதல் செய்!







காதல் செய்!

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
மஞ்சள் வெய்யிலை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
வெள்ளை மழையை காதல் செய் !

திண்ணை வைத்த வீட்டை சிட்டு குருவி கூட்டை
தாடி வைத்த ஆட்டை காதல் செய் !

வண்ண பூக்கள் தோட்டம் வெள்ளி பனிமூட்டம்
விண்ணில் மேக கூட்டம் காதல் செய் !

வாழும் வாழ்வை காதல் செய் !

போகும் ஊரை நீ காதல் செய் !
காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
கண்ணில் பட்டதை காதல் செய் !

காதல் செய் காதல் செய் !
உன்னில் உள்ளதை காதல் செய் !

நான் என்ற அகந்தை துளியும் இன்றி
உயர்ந்த மலைகள் கால் மிதித்த இடத்தில்
பாத சுவட்டை அழிக்கும் அலைகள்
மாட்டு கொம்பில் கட்சி பாசம்
டாட்டா காட்டும் குழந்தை நேசம்
காற்றில் வரும் மீன்கள் வாசம்
இதையும் காதலிப்போம்.

காதல் செய் காதல் செய் !






Tuesday, 6 April 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்பே
காற்று பலமாய் இருக்க
பயந்து விடாதே!
அது தென்றல்தான் - உன்
பிறந்தநாள் வாழ்த்துகூற
வருகிறது சற்றே வேகமாக! என்னைப்போல!


----------------------------------------------------------------------
போட்டியிட்டேன் - நான்
போட்டியிட்டேன்
மரகதப் பூக்கள்
குளிரிளந்தென்றல்
கார்நீல மேகத்துடனும்
போட்டியிட்டேன் !
உன் பிறந்தநாள் வாழ்த்துக் கூற!


----------------------------------------------------------------------
பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை .
தேவையில்லை இந்த கவிதைக்கு!
கவிதைகள் பல நூற்றாண்டு
வாழ்வது - மரபுதானே!



----------------------------------------------------------------------
நண்பா
உன் அருகில் நானிருந்தால்
ஆதவன் கரமுனை தொடுமுன்
என் வாழ்த்துத் தென்றல் தழுவியிருக்கும்!
நானோ இங்கிருப்பதால் - அந்த
ஆதவனிடமே தந்துள்ளேன் - உன்
பிறந்தநாள் வாழ்த்துக்களை!
இன்றுனை முதலில் தழுவிய
கதிரவனின் கதிர்கள் - என் கைகளே!
தமிழ் போல் வாழ்க!
கவிபோல் வாழ்க!


----------------------------------------------------------------------
உன் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோறுகிறேன் மறுபரிசீலனை!
தோட்டத்து மலர்கள் ஒன்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
குளுமையின் உவமை நிலவேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
கவிதைகள்தான் என்றேனும்
கொண்டாடியதா பிறந்தநாளை ?
பின் உனக்கு மட்டும் ஏன்?
நீ முழுநிலவில் மலர்ந்த கவிதை என்பதாலோ?
பல்லாண்டு வாழ்க!
பண்பாடு வளர்க்க!


-சக்தி

Friday, 2 April 2010

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !


மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கலங்குதடி

பார்வையிலே சில நிமிடம்
பயத்தோடு சில நிமிடம்
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !

எது ஞாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை
அது இரவா அது பகலா அதை பற்றி அறியவில்லை !

யார் தொடங்க? யார் முடிக்க? ஒரு வழியும் தோன்றவில்லை
இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை !

அச்சம் கலைந்தேன் ஆசையினை நீ அணைத்தாய் !
ஆடை கலைந்தேன் வெட்கத்தை நீ அணைத்தாய் !

கண்ட திருகோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே !