Thursday, 3 June 2010

உயர்வில் சரிவு!


உயர்வில் சரிவு!

மழலையாய் கழித்த காலங்கள் - அது

நினைவில் இல்லை - நிழலாடும் கற்பனையில்

சலிக்காமல் நினைக்கும் அ(ம்மா)ப்பாவின்

கொஞ்சலுக்கிடையில்!

சிறுவனாய் கடந்த பருவம் - சிறிய

குருவிக் குடும்பம் - மனதில்

போட்டு வைத்த பதியம்!

கூட்டுக்கு அது ஒரு வாயில்

ஈட்டிய லட்சுமி போவதற்கோ

பலவாயில்!

எங்கஊரு ரேசன் கடையிலே

உளுத்த அரிசி வாசனைச் சோறு

அள்ளித்தின்ன அறியா வயசு

மகிழ்ச்சி பெருக்காய் நெஞ்சுக்குள்ளே!

மலைமேல் மண்சரிய

உருண்டோடிய பாறையாய்

உருண்ட காலச்சக்கரத்தில் - கிடைத்தது

பட்டறிவும் படிப்பறிவும் விழித்துழைக்க

முத்தென தொழிழாக்கி

உரியது சில ஆக்கி - நின்ற போதினிலே

சரிந்து கிடந்தது குருவிக்கூட்டு மகிழ்ச்சி!

பிரபஞ்ச விரிவாக்க விதிபோல

மனித மனமும் விரிந்து கொண்டும்

ஒன்றைவிட்டு ஒன்று விலகிக்கொண்டும்

போகும் போலும்!

-சக்தி

No comments: