Thursday, 3 June 2010

காலம் கடந்த பாடம்!


காலம் கடந்த பாடம்!

அவன் பார்வையில் மாயை(காதல்) படர
ஆனது அவள் எச்சில் குமிழியும்
ரசனைக்குரியதாக !

தந்தையை ஏய்த்து விட்டு வந்தாள்
தன்னை பார்க்க - மகிழ்ந்தான்!
தன் சிநேகிதத்தை பொய்யால்
சமாளிக்க - ரசித்தான்!
நேர்க்கொண்ட நோக்கில்லா(ததை)
நளினமென - உவந்தான்!
மிகப் பிடித்த பிடிவாதம்
அவளுக்குரியமிடுக்காய் - உணர்ந்தான்!
செய்த பணவிரயம் தன்னுடனான
காலவிரயத்துக்கே - என்றெண்ணினான்!
உற்றார் உறவினரை எதிர்த்து
மணமுடித்து - மகிழ்ந்தான்!
மனைவியான காதலியின்
சுயவியல்புகளால் - சிந்தித்தான்!
தவறான விஷயங்கள் மட்டுமே
தெரிந்திருக்கிறது - மிக அழகாக!

யதார்த்தம் தைரியம் சிந்தனையும்
சமூக பார்வையும் கோபமும்
வாழ்வு நோக்கிய முனைப்பும் மட்டுமே
நேசிக்கப்படவேண்டியவை!
காலம் கடந்தப் பாடம் - உதவட்டும்
மற்றவர்களுக்கேனும் !
-சக்தி

No comments: