
உடனிருந்த காலத்தில்
கருத்துப் போர்!
இல்லாத நாள் அது
திருநாள்.
நட்பின் இயக்கம் அது
வேறுபாட்டில் - ஒரு
ஞானியின் கருத்து!
கருத்து வேறுபாட்டிலேயே
இயங்கிய நட்பு - பிரிவில்
உணர்த்தியது அவளென் சகஊழியை
மட்டுமல்ல! சற்று மேலே என்று!
எனது கிறுக்கல்களையும் நான் ரசித்த மற்றும் என்னை கவர்ந்த சில துணுக்குகளையும் இந்த வலைப்பூவில் பதிக்க முற்பட்டுள்ளேன். இது போன்ற செயல்பாடுகள் தமிழார்வத்தை செழிக்கசெய்ய உதவிடும் என்று நம்புகிறேன். இந்த வலைப்பூவை பார்வையிடும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
உயர்வில் சரிவு!
மழலையாய் கழித்த காலங்கள் - அது
நினைவில் இல்லை - நிழலாடும் கற்பனையில்
சலிக்காமல் நினைக்கும் அ(ம்மா)ப்பாவின்
கொஞ்சலுக்கிடையில்!
சிறுவனாய் கடந்த பருவம் - சிறிய
குருவிக் குடும்பம் - மனதில்
போட்டு வைத்த பதியம்!
கூட்டுக்கு அது ஒரு வாயில்
ஈட்டிய லட்சுமி போவதற்கோ
பலவாயில்!
எங்கஊரு ரேசன் கடையிலே
உளுத்த அரிசி வாசனைச் சோறு
அள்ளித்தின்ன அறியா வயசு
மகிழ்ச்சி பெருக்காய் நெஞ்சுக்குள்ளே!
மலைமேல் மண்சரிய
உருண்டோடிய பாறையாய்
உருண்ட காலச்சக்கரத்தில் - கிடைத்தது
பட்டறிவும் படிப்பறிவும் விழித்துழைக்க
முத்தென தொழிழாக்கி
உரியது சில ஆக்கி - நின்ற போதினிலே
சரிந்து கிடந்தது குருவிக்கூட்டு மகிழ்ச்சி!
பிரபஞ்ச விரிவாக்க விதிபோல
மனித மனமும் விரிந்து கொண்டும்
ஒன்றைவிட்டு ஒன்று விலகிக்கொண்டும்
போகும் போலும்!
-சக்தி