Monday 6 June 2016

மாற்றத்திற்கான கருவி
  
    அரசியலுக்கு தொடர்பில்லாதவனாக உணரும் எந்த ஒரு தனிமனிதனும் இல்லாத சமூகத்தை எந்த கட்சியாக இருந்தாலும் மக்களின் நலனை தவிர்த்து ஆட்சி செய்ய முடியாது. 

    வலுவானவனை அகற்றி வலுவற்றவனை அமர்த்தி, வலுவான சமூக அரசியல் மாற்றங்களை நிகழ்த்த முடியும் என்று எண்ணுவது வேறு புதிய பிரச்சனைகளை தரலாமே தவிர தீர்வை என நம்ப முடியவில்லை.

    கட்டற்று ஓடும் குதிரைக்கு கடிவாளம் இடவேண்டுமேயன்றி, குதிரைக்குட்டி கட்டற்று ஓடாது என்பதற்காக தேரில் பூட்டலாகாது. குதிரைக்குட்டியே குதிரையை புறந்தள்ள எண்ணினாலும் தேரிழுக்கம் வலிமைபெற்ற பின்னே நிகழ்த்த முடியும்.

    “திராவிடக் கட்சிகளால் தான் தமிழகத்துக்கு இந்தநிலைமை !“

இது நேர்மறைப் பொருளும் தரும், எதிர்மறைப் பொருளும் தரும். இற்றுப்போன கடிவாளங்கள் புதுப்பிக்கபடுவதாலேயே நேர்மறையாய் பயணிக்கவைக்க முடியும்.  முன் தலைமுறையில் மாணவர்களிடம் இருந்த அரசியல் ஈடுபாடு  நம் தலைமுறைக்கு வராமல் (பல கேரட்கள் கட்டி) மடைமாற்றப்பட்டது தான் கடந்த 40 ஆண்டுகளில் காலம் செய்த கொடுமை. 

மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளச்செய்வதுதான் மாற்றத்திற்கான கருவி. 

-சக்தி
(ஏ)மாற்றம்

மணநாள் தொட்டு மாறாத
மனைவியை எதிர்நொக்கும் -கணவன்
மாறவில்லையென்பதே மாறிய மனைவியின் 
மாறா மனக்குறை! மாற்றம் ஏமாற்றம். 

-சக்தி