Monday 31 August 2015

காலமானார் கலாம்..!


எளிமையின் உயர்வை 
உணர்த்திய கலாம்!

உழைப்பின் உன்னதத்தை
உரைத்த கலாம் !
அர்பணிப்பின் அற்புதத்தை
காட்டிய கலாம்!

நேர்மையின் உச்சத்தை 
தொட்ட கலாம் !

நல்லிணக்கத்தின் நயத்தை
நவின்ற கலாம் !

மனிதநேயத்தின் மாண்பு 
மேவிய கலாம் !

பாரதியின் அக்கினிகுஞ்சை
சிறகொடு வளர்த்த கலாம் !

வானறிவியல் அணுவியல் 
சுதந்திரம் பெற்ற கலாம் !

மாற்றுநோக்கின் மகிமையை
கனவாலுரைத்த கலாம் !

மாற்றுநோக்கின் மகிமையை 
கனவாலுரைத்த கலாம் !

வல்லரசு கனவை நனவாக்க
பள்ளிகளை களமாக்கிய கலாம் !

கட்சி எல்லையை கடந்து நின்ற
” ’முதல்’ குடிமகன்” கலாம் !

பழந்தமிழ் உயர்நோக்கின் உலககுடிமகனை
அடக்கியாண்டோர் அவையில் அமரச்செய்த கலாம் !

காந்தியின் கனவை மறந்த அன்றைய மாணவர்களே
கலாமின் கனவை நோக்கி வாழ்வீரோ ?

கலாமின் கனவை உணர்ந்த இன்றைய மாணவர்களே
அவர்தம் பாதையில் வாழ விழைவீரோ ?.


ந.சக்தி

Thursday 16 July 2015

மாண்டவர்க்கோர் அஞ்சலி

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க\
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சேர்க

ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போலொரு பழையதும் இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உளாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீ உண்டதென்றது சாம்பலும் ங்கே

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியியைப் போலொரு மா மருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதிமழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவ தென்ன….

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதை ஒன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்

பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியன் கீற்றொளித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடகூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் போக
தூயவர்க் கண்ணொளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க

போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க

- வாட்ஸ் அப்-ல் வந்தது