Thursday, 3 June 2010

எங்கே எனது கவிதை!

எங்கே எனது கவிதை!

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்த மனம் தேடுதே
மையல் பாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை கனவிலே
எழுதி மடித்த கவிதை

No comments: